Skip to main content

அகோரியாக மாறிய வடமதுரை என்ஜினீயர் மரணம்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!

 திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள எலப்பார்பட்டியை சேர்ந்த தனசேகர் மகன் ரவிசங்கர் என்ற கண்ணன் (வயது 31). தற்போது இவர், வடமதுரை திருச்சி மெயின் ரோடு பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வடமதுரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்த இவர், சென்னையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்தார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மாலை அணிந்து சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு சென்றார். அதன்பிறகு அவர் ஓலைச்சுவடிகள், ஆன்மிக புத்தகங்களை அதிக அளவில் படித்தார். 



இதன் மூலம் அவருக்கு ஆன்மிகத்தின் மீது தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ள 12 ஜோதி லிங்கங்களை பாதயாத்திரையாக சென்று கண்ணன் தரிசித்தார். இதைத்தொடர்ந்து இமயமலை, காசிக்கு சென்று அகோரியாக தீட்சை பெற்றார். அகோரியாக மாறிய பிறகு வடமதுரைக்கு வந்த கண்ணன், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினார். மேலும் ஞான உபதேசமும் செய்து வந்தார். கடந்த 90 நாட்களாக உணவு அருந்தாமல் தீவிர விரதத்தில் கண்ணன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் இருந்தபோது திடீரென அவர் உயிரிழந்தார். 

இதனையடுத்து அவருடைய உடல் எலப்பார்பட்டி பகுதியில் அகோரி முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அதன்படி பத்மாசன முறையில் அவரது உடலை வைத்து, அதன்மீது உப்பு, விபூதி, சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட பொருட்களை போட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில் அகோரிகள், சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 48 நாட்களுக்கு பிறகு அவரை அடக்கம் செய்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வடமதுரை போலீசார் இளைஞரின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.


செய்தியாளர்: அரியநாயகம் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...