சந்திர கிரகணத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலின் நடை சாத்தப்பட்டது. இன்று சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும், சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.
முழு நிலவு பூமியின் நிழலில் கீழ் வரும் போது முழு சந்திர கிரகணமும் சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலில் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.இதனால் இன்று திருப்போரூர் கந்தசாமி கோயிலில் இருந்த பக்தர்கள் அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர். பின்னர் மதியம் 12.30 முதல் நடை சாத்தப்படுகிறது. மேலும் அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு நாளை கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணியளவில் நடைதிறக்கப்பட்டு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: மூர்த்தி

Comments
Post a Comment