தருமபுரி மாவட்டம், இருளப்பட்டியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த சில வருடங்களாக பஞ்சாயத்தில் செய்யப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்தும் ,வரவு செலவு கணக்குகள் குறித்து பொதுமக்களுக்கு படித்து காண்பிக்கப்பட்டன.
இறுதியாக கொரோனா கால கட்டத்தில் தங்களின் உயிரை துச்சமென கருதி தங்களின் பணியை சிறப்பாக செய்த தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் குமார் மரியாதை செலுத்தினார். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர்,அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மோகன்ராஜ்

Comments
Post a Comment