தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கை ஊராட்சி சின்னத்தம்பி நாடாரூரில், நவம்பர் 1 உள்ளாட்சி தின நாளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. போதிய விழிப்புணர்வு செய்யாததால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்களை வைத்து கூட்டம் நடைபெற்றது.
இதில் பொய்கை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் ஒரு சில வார்டு உறுப்பினர்கள் மேலும் கிராம நிர்வாக அலுவலர், வேளாண்துறை அலுவலர், நியாய விலை கடை ஊழியர்கள், ஒரு சில மகளிர் குழு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். மேலும் 5000 வாக்காளர்களுக்கு மேற்கொண்ட ஊராட்சியில் 50 பேர் பங்கேற்றுக் கொண்டார்கள் என தெரிகிறது. ஆகையினால் மாவட்ட நிர்வாகம் மாற்று தேதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து கிராம சபை கூட்டம் நடத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றார்கள்.
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment