செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட படூர் ஊராட்சியில், படூர் முதல் நிலை ஊராட்சி மற்றும் அஞ்சல் துறை மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை இணைந்து ஆதார் அட்டை முகாம் மற்றும் இந்திய அஞ்சல் துறை சார்பில் பிறந்த தேதி மற்றும் கைபேசி எண், மின் அஞ்சல் திருத்தம் புதிய ஆதார் கார்டு பதிவு செய்தல், பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், போன்றவற்றைகளுக்காக 300க்கும் மேற்பட்டோர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கையை கேட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆதார் அட்டை முகாம் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் படூர் கே.ஏ.எஸ். சுதாகர் ,படூர் ஊராட்சி மன்றத்தலைவரும் , அறக்கட்டளையின் நிருவாகியுமான கே.ஏ.எஸ்.தாராசுதாகர் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஆதார்சேவை முகாமை துவங்கி வைத்து மனுக்கள் பெற்றனர்.
செய்தியாளர்: மூர்த்தி


Comments
Post a Comment