நீலகிரி மாவட்டம் உதகை- பாலகொலா ஊராட்சியின் சார்பில் கிராம சபை கூட்டம் தங்காடு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பொது மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மக்களின் உரிமைகள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்த கிராமசபை கூட்டத்தில் உதகை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், பாலகொலா ஊராட்சி மன்ற தலைவர், நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், நீலகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர், போக்குவரத்து துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள், குந்தா வட்டாட்சியர், இந்தியன் வங்கி மேலாளர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பிரபு

Comments
Post a Comment