நல்லம்பாக்கம் அருள்மிகு ஶ்ரீநல்லமங்கை உடனுறை ஶ்ரீசொர்ணலிங்கேஸ்வரா் ஆலயத்தில் நடைப்பெற்ற அன்னாபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லம்பாக்கம் ஊராட்சியில் மலைமீது சுமார் 100ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த அருள்மிகு திருநல்லமங்கை உடனுறை சொர்ண லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இதில் சொர்ணலிங்கேஸ்வரார் தாயார் திருநல்லமங்கை ஈஸ்வரி உடன் எதிரே நந்தியபெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்கள். முன்னொரு காலத்தில் இங்கு வந்த நல்லபாக்கத்திற்கு வருகைப்புரிந்த வடிவானந்த சித்தர் என்பவர் இங்குள்ள மூலவர்களை உருவாக்கி தியானம் செய்து ஜோதியாக கலந்துவிட்டார் என இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்கள். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் கோவில் அருகே வசித்துவந்த சிவகுருநாதன் என்ற இளைஞர் கனவில் மலைமீது உள்ள சொர்ணலிங்கேஸ்வரன் தம்பதியர் சமேதராக தோன்றி தன்னை வழிபட பணித்துள்ளனர்கள்.
அது முதல் சிவகுருநாதன் இல்லறவாழ்வை துறந்து கோவிலில் பூஜை செய்து வணங்கினார். பல்வேறு இடர்பாடுகளை சந்தித்த சிவகுருநாதன் மலைக்கு கீழ்கோவிலை ஏற்படுத்தி இன்றளவும் பூஜைசெய்து வருகிறார். மூலவர்களின் அளப்பரிய சக்தியால் கோவிலின் மகிமை தமிழகமெங்கும் பரவிவருகிறது. இந்நிலையில் நேற்றைய முன்தினம் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பெளர்ணமியையொட்டி மலை அடிவாரத்தில் இருக்கும் கோவிலில் உள்ள ஶ்ரீஅகோரவீரபத்திரா் மற்றும் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைப்பெற்று தீபதூப ஆராதனைகள் காட்டப்பட்டன. இரவு நேரத்தில் மலை உச்சியில் இரவு 10 மணிக்கு மேல் சொர்ண லிங்கேஸ்வரர் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை உள்ள நடைப்பெற்றன.
அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 09.00 மணிக்கு மூலவர் திருநல்லமங்கை ஈஸ்வரி சொர்ணலிங்கேஸ்வர் ,நந்தியபெருமானுக்கு சுமார் 150கிலோ அரிசியினால் ஆனா அன்னத்தில் அன்னாபிஷேகம் செய்தனர்கள். அதேப்போல் மலை அடிவாரத்தில் உள்ள சொர்ணலிங்கேஸ்வரருக்கும் அன்னாபிஷேகம் நடைப்பெற்று, அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபதூப ஆராதனைகள் காட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து வரிசையில் நின்று அர்ச்சனை செய்துவழிப்பட்ட பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்டுச் சென்றனர்கள். அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் சிவனாடியார்கள் கலந்து கொண்டனர்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய அறங்காவலரும் சிவசேவகன் சிவகுருநாதன் நல்லம்பாக்கம் இளைஞர்கள் பிரம்மாண்டமாக செய்து முடித்தார்கள்.
செய்தியாளர்: மூர்த்தி


Comments
Post a Comment