திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜாவின் பாமர இலக்கியம் உரையரங்கம் நிகழ்ச்சி திண்டுக்கல் துளிர் நண்பர்கள் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துளிர் நண்பர்கள் அமைப்பு பொருளாளர் நாகராஜன் வரவேற்றார். செயலாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில் பசியில்லா வடமதுரை சேர்ந்த குழுவினர் டி.என்-57 படத்திற்காக பாராட்டுக்கள் தெரிவித்து, நூல்கள் வழங்கப்பட்டது.
பாமர இலக்கியம் நூலை பற்றி திறனாய்வு உரை எழுத்தாளர். முத்துநாகு, முனைவர்.முத்தையா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் மற்றும் பாமர இலக்கியம் எழுத்தாளர் கஸ்தூரி ராஜா ஏற்புரையாற்றினார். நிறைவாக துளிர் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி இசக்கிமுத்து நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை விழா ஒருங்கிணைப்பாளர் துளிர் அமைப்பின் தலைவர் அ.முகமது யூசுப் அன்சாரி செய்திருந்தார்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment