திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள IOB ATM ல் கேட்பாரற்று கிடந்த 23 ஆயிரம் பணத்தை அதன் அருகே பணியில் இருந்த திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த முதல் நிலை காவலர் அருள் பிரான்சிஸ் எடுத்தார். அதனை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அந்த பணம் யாருடையது என தெரியவில்லை. பின்பு விசாரித்ததில் திண்டுக்கல் மாரம்பாடி நாயக்கனூரில் சேர்ந்த மொக்க ராஜ் என்பவர் மகன் ராஜ்கிரண் வயது 24 என்பவருடையது என தெரியவந்தது.
மேற்கொண்டு அவரை விசாரித்ததில் , அவசர தேவைக்காக தனது உறவினருக்கு பணம் அனுப்புகையில் ATM - யை சரியாக லாக் செய்யாமல், பணத்தை அனுப்பி விட்டதாக நினைத்து பாதியிலே விட்டுச் சென்றுள்ளார். இந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது. மேற்கொண்டு விசாரனையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்து பொதுமக்கள் முன்னிலையில் மேற்படி நபரிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தார். தனது பணியை சிறப்பாக, நேர்மையாக செய்த காவலரை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment