Skip to main content

வடமதுரை அருகே நாய் கடித்த இடத்தில் சூடு... பலியான குழந்தை...!



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பிரகாஷ், கெளரி. இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயது பெண் குழந்தை இருந்தது. இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தங்கி, அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். திண்டுக்கல் வடமதுரை அருகே செங்குளத்துபட்டியில் இவர்களின் தூரத்து உறவினர் ராஜேஷ்குமார், அவரது மனைவி கீர்த்திகா உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாகியும் குழந்தையில்லை. ராஜேஷ்குமார் கட்டட வேலை பார்த்துவருகிறார். இவர்கள் தூரத்து உறவினர்களாக இருந்தபோதிலும், நெருங்கி பழகியுள்ளனர். மேலும் குழந்தையில்லாத காரணத்தால் ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி, ஷிவானியிடம் அன்பு காட்டியுள்ளனர். இதனால் அடிக்கடி திண்டுக்கல்லில் இருந்து பல்லடம் வந்து பிரகாஷ் வீட்டில் இருந்துவிட்டு ஷிவானியை அடிக்கடி திண்டுக்கல் அழைத்து வந்து தங்களுடன் தங்க வைத்திருக்கின்றனர்.

ஷிவானியும் அவர்களிடம் மிகவும் அன்பாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தீபாவளிக்கு  ராஜேஷ்குமார், கீர்த்திகா தம்பதி பல்லடம் சென்றுவிட்டு ஷிவானியை திண்டுக்கல் அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் ஷிவானி  விழுந்து காயமடைந்துவிட்டதாகக் கூறி அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அங்கு உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சையில் இருந்த ஷிவானி உயிரிழந்துள்ளார். இதையடுத்து தான் குழந்தை உயிரிழந்த தகவலறிந்த பிரகாஷ், கெளரி தம்பதி போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வடமதுரை போலீஸார் கூறியதாவது: ”ராஜேஷ்குமாரின் உறவினர் பல்லடத்தில் உள்ள செங்கல் சூளையில்  பிரகாஷ், கெளரியுடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். அவர்களை பார்க்க பல்லடத்திற்கு வந்தபோது தான், பிரகாஷ் குடும்பத்துடன் நெருங்கி பழகியுள்ளனர். ஒருவகையில் தூரத்து உறவினர்களாகவும் இருந்துள்ளனர். இந்தப் பழக்கம் குழந்தையை திண்டுக்கல்லுக்கு அழைத்து செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தீபாவளிக்கு அழைத்து சென்றவர்கள் தொடர்ந்து குழந்தையை தங்களுடனே வைத்து கொண்டிருந்திருகின்றனர். இதற்கிடையே வழக்கமான  குழந்தைகளை போல சுட்டியாக சேட்டைகள் செய்துள்ளார். இதை கீர்த்திகா கடுமையாக கண்டித்திருக்கிறார். தொடர்ச்சியாக சொல் பேச்சு கேட்காமல் இருந்த குழந்தையை தாக்க தொடங்கியுள்ளார்.

நாயுடன் விளையாடாதே இல்லையென்றால் கடித்துவிடும்’ எனக் கூறியவர், குழந்தையை நாய் கடித்துவிட்டு, `சொல் பேச்சு கேட்காமல் நாயுடன் விளையாடினால் இப்படி தான் கடிக்கும்’ எனக் கூறியுள்ளார். மேலும் அவர்கள் வீட்டில் விறகு அடுப்பு பயன்படுத்தி வந்த நிலையில் தீக்கட்டையால் குழந்தைக்கு சூடு வைத்துள்ளார். இதில் மிகவும் படுகாயமடைந்த குழந்தை படுத்தபடுக்கையான பிறகே வேறு வழியின்றி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

4 நாள்களாக பிரகாஷ், கெளரி குழந்தையிடம் பேச முயன்றபோதும் பல்வேறு காரணங்களை கூறி நடந்ததை மறைத்துள்ளனர். குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த கீர்த்திகா, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். இதனால் தான் ஒரு குழந்தை உயிர் பறிபோகியுள்ளது. எனவே இதில் தொடர்புடைய ராஜேஷ்குமார் கைது செய்து விசாரிக்கிறோம், என்றனர்.


செய்தியாளர்: அரியநாயகம் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...