புழல் அடுத்த ரெட்டை ஏரி லஷ்மி புரம் திருவள்ளூவர் நகரில் கண்ணகி தெரு கம்பர் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 250 குடும்பங்களுக்கு மேலாக 1000 மேற்பட்டோர் 40 வருடங்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு என கூறி கடந்த மாதம் 17 ம் தேதி அன்று வருகிற 7 ம்தேதி அதாவது 21 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியது . இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து முதல்வருக்கும் பொதுப்பணித்துறை மற்றும் மாதவரம் தாசில்தாருக்கும் நாங்கள் 40 வருடமாக குடியிருந்து வருகிறோம். இதற்கு கிராம நத்தம் சான்றிதழ் உள்ளது எனவும் மேலும் கலைஞர் ஆட்சியில் 75 வீடுகளை கட்டி அதில் குடியிருப்பதாகவும் இதில் சிலருக்கு பட்டா வழங்கியதையும் குறிப்பிட்டு வீடுகளை காலி செய்ய மறுத்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு மாற்று இடம் தரக்கோரி விண்ணப்ப மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அரசு அதிகாரிகளிடம் பலதடவை இதுபற்றி எடுத்துரைத்தும் யாரும் செவி சாய்காததால் காலக்கெடு முடியும் தறுவாயில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ரெட்டை ஏரி லஷ்மிபுரம் அருகே தீடீரென குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதனை அறிந்த புழல் சரக காவல் உதவி கமிஷனர் ஆதிமூலம் கொளத்தூர் சரக உதவி கமிஷனர் சிவகுமார் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பேசுவதாகவும் உங்கள் கோரிக்கைகளை நியாயமான முறையில் அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளீர்கள். ஆதலால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் விரைவில் அரசு நல்ல முடிவேடுக்கும் .எனக்கூறி அங்குள்ள மக்களிடம் எடுத்துரைத்தனர். அவர்களுடன் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சென்னை சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சசிதரன் அவர்களை சமாதானப்படுத்தி பொதுமக்களை கலைந்து செல்ல அறிவுறித்தினர். அதன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதன்காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments
Post a Comment