குற்றாலத்தில் தொடர்ச்சியாக கலப்படம் செய்யப்பட்ட பதநீர் விற்பனை புகாரின் எதிரொலியாக, பதநீர் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கலப்படம் செய்யப்பட்ட பதநீர் தரையில் கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சேந்தமரம் பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட பதநீர் விற்பனையாளர் வருகிறார்கள். கலப்படம் செய்யப்பட்ட பதநீர் அருந்தும் போது கல்லடைப்பு போன்ற பிரச்சனை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே பதநீர் விற்பனை செய்பவர் மீது மாவட்ட நிர்வாகம் அனைவரையும் அழைத்து சிறப்பு கூட்டம் ஒன்று ஏற்படுத்தி கலப்பட பதநீரால் ஏற்படும் தொற்று நோயை விவரித்து, அவர்களுக்கு மாற்று தொழிலுக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும். இல்லையென்றால் சபரிமலை சீசன் தொடங்க இருக்கிறது, கூடுதலாக பதநீர் விற்பனையாளர் வருவார்கள், அதற்குள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment