திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா கோட்டையூர் ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டியை சேர்ந்த முத்துராஜ்(வயது50) விவசாயியான இவர், ஜெர்சி பசுமாடு வளர்த்து வந்தார். அந்த ஜெர்சிமாடு சினையாக இருந்து 5 தினங்களுக்கு முன்பு கன்று ஒன்று ஈன்றது. இந்தக்கன்றுகுட்டி மட்டும் வீட்டில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனக்கு சொந்தமான தென்னந்தோப்பு மரத்தடியில் ஜெர்சி மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று இடிமின்னலுடன் கூடிய மழை பெய்தபோது, மின்னல் தாக்கி ஜெர்சி மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் முருகவேல், கோசுகுறிச்சி கால்நடை உதவி மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த ஜெர்சி மாட்டை அதே பகுதியில் பரிசோதனை செய்தனர்.மேலும் அவர் மின்னல் தாக்கி உயிரிழந்த ஜெர்சிமா டுவிற்கு அரசின் இழப்பீடு பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்: அரியநாயகம்


Comments
Post a Comment