உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், கல்லறை திருநாள் நிகழ்வை வருடாந்தோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி தங்களின் இறந்துபோன முன்னோர்களை நினைவு கூறும் வகையில், அவர்களது கல்லறைக்கு சென்று கல்லறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற பொருட்களைக் கொண்டு வழிபாடு மற்றும் ஜெபம் செய்வது வழக்கம்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலய பங்குதந்தை வினோத் லூயிஸ், தென்கரை கோட்டை பாத்திமா நகரில் உள்ள கல்லறையில் இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபித்தார். அதனை தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 500க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் சென்று தங்களது முன்னோரின் கல்லறையை அலங்கரித்து ரோஜா மற்றும் பூக்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்தனர்.
செய்தியாளர்: மோகன்ராஜ்

Comments
Post a Comment