தென்காசி நகராட்சி, உலகம்மாள் சமேத காசி விஸ்வநாதர் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவில் அருகே, பழைய நீதிமன்றம் மேற்புறம் சில மாதங்களுக்கு முன்பு நமக்கு நாமே திட்டம் மூலம் கழிப்பிட வசதி அமைக்கப்பட்டு நகர்மன்ற தலைவரால் தென்காசி நகராட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தற்போது பூட்டப்பட்டு செயல்படாமல் உள்ளது. ஆகையினால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இங்கு வரும் பக்தர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment