பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, செட்டிக்கரையில் ரூ.3.66.கோடி, மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பொறியியல் கல்லூரி விடுதியை, மாணவர்கள் பயன்பாட்டிற்க்காக பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ,மாவட்ட ஆட்சியர் சாந்தி திறந்து வைத்தனர். தருமபுரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், நீலாபுரம்.செல்வம், ஊராட்சி மன்ற தலைவர்,காஞ்சனா சங்கர், அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மோகன்ராஜ்

Comments
Post a Comment