திருச்சி மாவட்டம்,மணப்பாறை வட்டம் முத்த புடையான்பட்டி அஞ்சல் களத்துப்பட்டியை சேர்ந்த அண்ணாவி பிள்ளை மகன் தங்கவேலு 48 என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அவரது ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் இருசக்கர வாகனத்தை கடந்த 5ஆம் தேதி மணப்பாறை மார்க்கெட் அருகே நிறுத்திவிட்டு வேலையை முடித்து வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணவில்லை என்று நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் தேடி வந்த நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை அஞ்சல் வல்லத்தை சேர்ந்த முருகன் மகன் சதீஷ்குமார் 30 என்ற புலி குட்டி, அதே பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் சக்திவேல் 42, சின்னசாமி மகன் பழனிவேல் 34 ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்து மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு எச் எப் டீலக்ஸ் ஒரு ஹீரோ ஹோண்டா, ஒரு டீலக்ஸ் ஹெவி டூட்டி ஆகிய நான்கு வாகனங்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: ஞானசேகரன்


Comments
Post a Comment