Skip to main content

கொடைக்கானலில் யூக்கலிப்டஸ் மரங்களை அகற்றம் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!

 தமிழகத்தில் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூக்கலிப்டஸ் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற நகரங்களில் இயற்கைக்கு மாறாகவும், நிலத்தடி நீரை உறிஞ்சி வரும் யூக்கலிப்டஸ் மரங்களை முற்றிலும் அகற்றி அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குன்னூரில் தற்போது யூக்கலிப்டஸ் மரங்கள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மொத்தமுள்ள மரங்கள் அனைத்தும் கணக்கிடப்பட்டு அதன் உயரம், சுற்றளவு ஆகியவை அளவீடு செய்து எண்கள் குறிப்பிடும் பணி நடந்து வருகிறது.



 மாவட்டம் முழுவதும் இப்பணிகள் முடிந்த பிறகு அதன் அறிக்கை மாவட்ட கலெக்டர் மூலம் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இது வரை யூக்கலிப்டஸ் மரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட வில்லை. கொடைக்கானலில் வருடம் முழுவதும் மழை பெய்தாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சியான நிலை உள்ளது. இங்குள்ள யூக்கலிப்டஸ் மரங்களை முற்றிலும் அகற்றி சோலை மரக்காடுகள் உருவாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் ஊன்றப்பட்ட யூக்கலிப்டஸ் மரங்களால் தற்போது தைலம் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். 

ஆனால் இவ்வகை மரங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கொடைக்கானல் ரேஞ்சர் சிவக்குமார் தெரிவிக்கையில், ஊட்டி வனக்கோட்டத்தின் கீழ் உள்ளது. கொடைக்கானல் வன உயிரின சரணாலய பகுதியாகும். இங்கு யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டும் போது அதனை எங்கு விற்பனை செய்வது? எவ்வாறு கொண்டு செல்வது? என்பதில் பிரச்சினைகள் உள்ளது. இது குறித்து அரசுக்கு வனத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் மரங்களை கணக்கெடுத்து அதனை அகற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கும் என்றார்.


செய்தியாளர்: அரியநாயகம் 


Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...