சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணித்ததால் ரயில் பயணிகள் அதிர்ச்சி
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணித்ததால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டா கத்தியை நடைமேடையில் உரசியபடி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என முக்கிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் சிலர் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலையங்களின் நடைமேடையில் பட்டா கத்தியை உரசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழைந்ததும் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணிக்கின்றனர்.
அடுத்தடுத்த ரயில் நிலையத்தில் மீண்டும் ரயில் நுழையும் போது வீடியோ எடுக்க சொல்லி மீண்டும் நடைமேடையில் பட்டா கத்தியை உரசியபடி பயணிக்கின்றனர். பட்டா கத்தியை உரசியபடி பயணித்ததால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்களே காட்சிப்படுத்திய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

.jpeg)

.jpeg)
.jpeg)

Comments
Post a Comment