வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிறைமாத கர்ப்பிணியான காவலர் திருமதி உஷா மறைவிற்கு மாவட்ட காவல் அதிகாரிகள் அஞ்சலி..
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிறைமாத கர்ப்பிணியான காவலர் திருமதி உஷா, காவல் நிலைய பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு, அவரும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தனர்..
அவரது இறுதி சடங்கில் மாவட்ட கண்காணிப்பாளர் நாகர்கோயில் துணை கண்காணிப்பாளர், கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நல சங்கம் தலைவர் பென்சிகர் துணைத்தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் : ஜார்ஜ்

Comments
Post a Comment