திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே கொங்கர்குளத்தை சேர்ந்தவர் சூர்யகுமார்(28), வேலுச்சாமி(38). 2 பேரும் செங்கோட்டை கிராமத்தில் ஒரு கட்டிடத்தில் காண்டிராக்ட் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ரமேஷ்குமார்(28) மற்றும் அவரது நண்பர்கள் இமானுவேல், தெய்வேந்திரன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் எங்கள் ஊரில் நீங்கள் எப்படி காண்டிராக்ட் வேலை செய்யலாம் என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
மேலும் கம்பியால் வேலுச்சாமியின் தலையில் தாக்கியதால் பலத்த காயமடைந்தார். அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அரியநாயகம்
.jpg)
Comments
Post a Comment