தென்காசி மாவட்டம் மதுரை புளியங்குடி சாலையில் வாகன சோதனைகள் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது கார் மோதி விபத்து..!
தென்காசி மாவட்டம் மதுரை செல்லும் சாலையில் புளியங்குடி அருகேயுள்ள வம்சவ விருத்தி நகர் பகுதியில் தலைமை காவலர் சுந்தரய்யா, காவலர் மருதுபாண்டி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து தென்காசி நோக்கி வந்த இனோவா கார் காவலர்கள் மீது மோதியதில் பலத்த காயமடைந்துள்ளனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இந்த நிலையில் தலைமை காவலர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மற்றொருவர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்க்கு வந்த புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து இனோவா கார் ஓட்டிவந்த கார் டிரைவர் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை வருகின்றனர்.
செய்தியாளர்: சந்திரன்

Comments
Post a Comment