Skip to main content

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச் சான்று பெற்றதா.! விளம்பர சான்று பெற்றதா..!

 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச் சான்று பெற்றது என செய்திகள் வருகிறது.. மனசாட்சி உள்ள மருத்துவர்கள் இதயத்தில் கை வைத்து சொல்லலாமா.!!! சுமார் 10 வருடத்திற்கு மேல் உள்ள சுகாதாரப் பணியாளர் மட்டும் தான் இப்போதும் பார்த்து வருகிறார்கள்.

 


செவிலியர்களும் பற்றாக்குறை இருக்கிறது மருத்துவர்களும் பற்றாக்குறை இருக்கிறது. பல இடங்களில் குடிநீர் கிடைப்பதில்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கனிவான முறையில் பேசுவதே கிடையாது. ஏதோ இவர்கள் சொந்த மருத்துவமனை போல் இயங்குகிறது. சில இடங்களில் சுகாதாரமற்ற முறையில் காட்சியளிக்கிறது. அனைத்து கழிவுநீர் கோப்பைகளுக்கு மூடி இல்லாமல் ஆங்காங்கே இருக்கிறது, 557 படுக்கை வசதியுடன் இருப்பது பெருமை கிடையாது முறையான செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கிறது.



 பயிற்சி மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வைத்துவிட்டு முறையான மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் அரசு மருத்துவமனை தான் தென்காசி மருத்துவமனை மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையில் பல கட்டிடங்களை மக்களுக்காக அர்ப்பணித்து வருகின்றது. ஆனால் இங்கே அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு ஒரு சிகிச்சை நடுத்தர ஏழை வர்க்கத்திற்கு ஒரு சிகிச்சை என பகுதிகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை அரங்கேற்றம் செய்து வருகிறார்கள். 



வெற்று விளம்பரம் தான் இந்த மருத்துவமனை செயல்படுகிறது பல நன்கொடையாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் முன்னாள் இந்நாள்  கட்சி பொறுப்பாளர்கள் பல்வேறு வகையில் உதவி செய்து வருகிறார்கள். ஆனால் இங்கு சிகிச்சைக்கு வருவர்களிடம் முறையற்ற முறையில் சிலர் பேசி வருகிறார்கள், இது கண்டிக்கத்தக்க கூடியது .ஆய்வக பணியாளர்கள் ஆள் பார்த்து பதிவதும்.. மருந்தாளர்கள் வானளாவிய அதிகாரம் படைத்தது போல் மாத்திரைகளை ஜன்னல் வழியாக வீசுவதும் தொடர்கதையாக இருக்கிறது. உண்மையிலேயே சொல்லப்போனால் ஒப்பந்த பணியாளர்கள் தான் வேலை பார்த்து வருகிறார்கள் உண்மையாக அரசு பணத்தில் வேலை பார்ப்பவர்கள் ஒருவர் கூட இங்கு மனசாட்சிப்படி வேலை பார்ப்பவர் கிடையாது. மருத்துவமனை வளாகங்களில் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது குழந்தை பிறந்தால் பணம்... வீழ்ச்சேரில் ஒருவரை மாற்று இடத்திற்கு கொண்டு போனால் பணம், இறந்தவர்கள் உடலை மறு கூர் ஆய்வு செய்து சடலத்தை தருவதற்கும் பணம் இவையெல்லாம் அரசு முறையாக கவனிக்கிறதா என்ற கேள்வியும் எழும்புகிறது. அவசர அவசரமாக தார்சாலை போடப்பட்டுள்ளது ஆய்வுக்கு வருகிறார்கள் என்று சொன்ன பிறகு இரண்டு நாளுக்கு முன்பே தார் சாலை போடப்பட்ட அவல நிலைதான் தென்காசி தலைமை மருத்துவமனை இங்கு முறையாக மருத்துவர்கள் பல நேரங்களில் வருவதே கிடையாது. காலையில் 10:00 மணிக்கு வருவது 12 மணிக்கு செல்வது பிறகு மறுநாள் தான் மருத்துவமனைக்கு வருவது தொடர் கதையாக இருக்கிறது. இங்கே பணிபுரியும் அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவருடைய சொத்துக்கணக்கையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் அரசு மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் தனியாக சொந்தமாக நடத்தி வரும்  கிளீனிங் சென்று விடுகிறார்கள.



 அரசு மருத்துவர்கள் வருகை பதிவு செய்வதை அரசு கண்காணிக்கப்பட வேண்டும், கணினி மூலம் பதிவு அதற்கு ஒரு ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும், அண்டை மாநிலமான கேரளா ஆந்திராவில் அரசு மருத்துவமனை எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்து தமிழக அரசு இங்கே செயல்படுவதற்கு சட்டதிட்டங்களையும் புதியதாக வடிவமைக்கப்பட வேண்டும். கொரோனா காலகட்டங்களில் கொரோனா ஊசி போடாமல் பலர் சான்றிதலுக்காக ஒவ்வொரு ஊசிக்கு ரூபாய் கட்டணம் செலுத்தி பல இடங்களில் கணினி மூலம் ரசித்து பெற்றுள்ளனர், குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் நடுத்தர வர்க்கத்துடன் ஏழைகளும்தான் அரசு மருத்துவமனையை கோவிலாக அரசு மருத்துவர்களை தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால் சில மருத்துவர்கள் முறையற்ற முறையில் நடந்து வருகிறார்கள் என்பது வேதனையான விஷயம். கர்ப்பிணி பெண்களிடம் கொச்சை வார்த்தைகளில் பேசும் மருத்துவர்கள் நீங்களும் பெண்கள் தான் என்பதை எப்போது சிந்தித்து பார்க்க போகிறீர்கள் என்பது தெரியவில்லை நீங்கள் படித்து மருத்துவர்கள் ஆனீர்கள் படிப்பறிவில்லாத மக்களிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாமல் நீங்கள் இருப்பது வேதனையான விஷயமாக இருக்கிறது உண்மையில் சொல்லப்போனால் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை விளம்பரமான  மருத்துவமனையாக செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட பலரை நேரில் பார்த்த நண்பர் ஒருவர் கூறியது..நடவடிக்கை எடுக்கப்படுமா.?


செய்தியாளர்: சந்திரன் 


Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...