திருச்சி மாவட்ட அ.ம.மு.க அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், கலைச் செல்வன், பாசறை தலைவர், கவுன்சிலர் செந்தில் பஞ்சநாதன்,டோல்கேட் கதிரவன், பழனிமாணிக்கம், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் கட்சியின் பொருளாரும், வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அரசு கொறடா மனோகரன் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு மற்றும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக ஆட்சியை கண்டித்து சிறப்புரையாற்றினார் . இதில் நிர்வாகிகள் இளையராஜா, கல்நாயக் சதிஷ், தென்னுார் சேட், வோதாத்தரி நகர் பாலு, வெங்கடேஷ், மனோஜ்குமார், எஸ்.எம்.ராஜேந்திரன், பீரங்கி சுப்பிரமணியன், சாந்தா,ஜீவனாந்தம், முல்லை சுரேஷ், என்ர்ஜி ரகுமான், செந்தமிழன், செந்தில்குமார், தென்னூர் குலாம் அலி, ரவீந்திரன், சாத்தனூர் வாசு, பாக்கியராஜ், எடத்தெரு குமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ஆனந்தன்

Comments
Post a Comment