மாதவரம் அடுத்த சின்ன மாத்தூர் பாரதிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் டேனியல் ராஜா (வயது 45) அவருடைய மகள் ஏஞ்சல்( வயது 23) பட்டப்படிப்பு படித்துவிட்டு கொளத்தூர் ரெட்டை ஏரி அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவருக்கும் கடந்த ஆறு வருடமாக காதல் இருந்து வந்த நிலையில் இருவரது வீட்டாருக்கும் இது தெரியவந்தால் ஏஞ்சல் தனது காதல் கணவரிடம் தன்னை திருமணம் செய்ய கேட்டுக் கொண்டதின் பேரில் அதற்கு தனுஷ் தான் வேறொரு பெண்ணை காதலிப்பவும் அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி ஏஞ்சலின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் பெரம்பூரில் உள்ள தனது சித்தியின் வீட்டிற்கு சென்று அங்குள்ள ஒரு தனி அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு கொண்டார். இவரின் அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த ஏஞ்சலை காப்பாற்ற மாதவரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .
அங்கு மருத்துவர்கள் பரிசோதத்தில் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர் . இது குறித்து தகவல் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரியப்பட்டதின் பேரில் மாதவரம் பால்பண்ணை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஏஞ்சலின் பெற்றோர் தனது மகளை காதலித்து ஏமாற்றி தற்கொலைக்கு தூண்டிய தனுஷ் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டனர்.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment