திண்டுக்கல் அருகே ஊரக வளர்ச்சி துறை மூலம் வழங்கப்பட்ட ஆடுகள் பலியானதால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் சிலப்பாடி ஊராட்சி பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேற்று தமிழக கால்நடை துறை சார்பாக ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள ஆதரவற்ற விதவைப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 17,000 மதிப்புள்ள 5 ஆடுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையிலேயே ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் பயனாளி கவுசல்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் பலருக்கு வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் அனைத்தும் பிறந்து சில மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டிகள் என கூறப்படுகிறது. இந்தக் குட்டிகளும் எப்போது இறக்குமோ என்ற கவலை பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சம்பிரதாயத்துக்கு ஏதோ வாங்கி கொடுத்தோம். கடமை முடிந்தது என்று இருக்காமல் தரமான ஆட்டுக்குட்டிகளை வழங்க வேண்டும் என பயனாளிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் : அறியநாயகம்

Comments
Post a Comment