அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய மகன் கிருஷ்ணகுமார் (17) தனியார் பள்ளியில் ப்ளஸ் 2 முடித்தார். கல்லூரியில் சேர்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கிருஷ்ணகுமார் செல்போன் ஆய்வு செய்ததில் அவர் படித்த பள்ளி ஆசிரியை சர்மிளா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தது தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் ஆசிரியை சர்மிளா கிருஷ்ண குமாரிடம் பேசுவதை தவிர்த்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. அதை தொடர்ந்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனுக்கு ஆசை வார்த்தை கூறி காதல் வசைபட வைத்த பள்ளி ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அகமது அலி
.jpg)
Comments
Post a Comment