மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அரண்மனைப் புதூர் ஊராட்சி மன்ற தலைவர்.! சி சி டிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை.
தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பிச்சை 51 வயதுடையவர். இவர் நேற்று முன்தினம் கேபிள் டிவி அலுவலகத்திற்கு சென்று வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்து நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தாக்கி விட்டு தப்பி ஓடிய போது பிச்சை என்பவர் கீழே விழுந்தார்.
காயத்துடன் எழுந்து வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்தில் உடம்பு முழுவதும் இரத்த வெள்ளத்தில் இருந்த பிச்சையை பார்த்து அக்குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடனே அனுமதித்தனர். மருத்துவமனையில் பார்த்த மருத்துவர்கள் பிச்சை காயம் அடைந்ததை உறுதி செய்யப்பட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் பிசி பட்டி போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
செய்தியாளர்: விக்னேஷ்

Comments
Post a Comment