பொன்னேரி அடுத்த ஊரணம்பேடு அருகில் உள்ள செங்கழுநீர்மேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் எல்லப்பன் வயது 65. இவர் ஊர்ஊராக சென்று மீன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் மீன் விற்பனை செய்வதற்காக தோப்புக்கொள்ளை கிராமத்திற்கு வந்தார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போதை ஆசாமி ஒருவர் எல்லப்பனிடம் வம்பு செய்துள்ளார்.
மேலும் உருட்டுக்கட்டையால் எல்லப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார்.அவர் வைத்திருந்த மீன்கூடையை வீசி எரிந்து அவரது இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த எல்லப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: சந்திரசேகர்


Comments
Post a Comment