கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள மருதத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தின் அருகே எம் ஜி ஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையின் கையை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து அப்பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் சேதமடைந்த சிலையை பார்வையிட்டு உடனடியாக சேதமடைந்த எம் ஜி ஆரின் திருவுருவ சிலையை சரி செய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசாருக்கு சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எம் ஜி ஆர் சிலைக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பொன்னேரி முத்து உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கூடியதால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: முத்துபாண்டியன்


Comments
Post a Comment