திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்தவர், விவசாயி ராமராஜ் (32). இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகளை அவரது சகோதரி முனீஸ் வீட்டு அருகில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலையில் 2 பசு மாடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி ராமராஜ், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பசு மாடுகள் ஒரே நேரத்தில் இறந்தது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில் அருகில் இருந்த ஒருவர் தனது மாடுகளுக்கு விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறி உள்ளார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமராஜ் புகார் கொடுத்த நபரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை டாக்டர் உயிரிழந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்துள்ளார். அறிக்கை வந்த பிறகுதான் மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.ஒரே நேரத்தில் 2 பசுமாடுகள் இறந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:அரியநாயகம்

Comments
Post a Comment