புழல் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசாருக்கு தகவல் கொடுத்த செய்தியாளரின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்திய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
புழல் அறிஞர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்து ராஜன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார் . இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார்.இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் சங்கையா என்பவரது மகன் சேதுராமன் (வயது 46) என்பவர் ஆத்திரமுற்று கடந்த 6 ம் தேதி அன்று செய்தியாளரின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தினார்.
இதில் இருசக்கர வாகனம் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது.இதுகுறித்து செய்தியாளர் கிறிஸ்து ராஜன் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட சேதுராமன் என்பவரை பிடித்து கைது செய்ய கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராம் உத்தரவிட்டார்.
அதன்படி புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் குற்றவாளியை வலைவீசி தேடி வந்தநிலையில் காவாங்கரை மீன் மார்க்கெட் பின்புறம் அருகே பதுங்கி இருந்த சேதுராமனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபாதேவி வழக்கு பதிவு செய்து சேதுராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் சேதுராமன் மீது கஞ்சா வழக்கு மற்றும் சென்னை , தஞ்சாவூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
செய்தியாளர்: அகமது அலி

Comments
Post a Comment