இன்று உலக கண் பார்வை தினமாக கடைபிடிக்க பட்டு வருகின்றது , இதன் ஒரு பகுதியாக, கோவை பிபிஜி செவிலியர் கல்லூரி, மற்றும் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து, பொதுமக்களுக்கு கண்பார்வை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை ஆர் எஸ் புரம் பகுதியில் நடத்தியது, இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள், கண் பார்வை குறி்த்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர் எஸ் புரம் பகுதியில் ஊர்வலமாக சென்றனர்.
மேலும் இது குறித்து, மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணா பிரகாஷ், கூறும்பொழுது நமது உடலின் மற்ற பாகங்களை நாம் பாதுகாப்பது, போன்று கண்களையும் பாதுகாக்க வேண்டும், கண்களில் நீர் வடிதல், கண்களில் பார்வை குறைபாடு, தூசி படுதல் போன்ற குறைபாடுகளுக்கு பொதுமக்கள் இன்றளவும் பலரும் மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர், இதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து அவர்கள் உணர்வதில்லை, கண் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை நாட வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. தற்பொழுது விஞ்ஞான உலகத்தில் அனைத்து குழந்தைகளும் அலைபேசியை பயன்படுத்தும் நிலை உள்ளது, இது பேராபத்தை ஏற்படுத்தும் எனவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் நாம் கண்ட குழந்தைகளுக்கும், தற்பொழுது பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கும் நிறைய மாற்றங்கள் உள்ளது.
தற்பொழுது உள்ள பள்ளி குழந்தைகள் ஐம்பது விழுக்காடுக்கும் மேற்பட்டோர் கண் பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வருகின்றனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் இயற்கைக்கு முரணாக நாம் செயல்படுவது மட்டுமே எனவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதற்கு, தாய்மார்கள் காகங்களை காட்டியும் சாலையில் நடைபெறும் காட்சிகளை காட்டியும் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிய காலத்தை நினைவு கூர்ந்து, மீண்டும் அதே செயல்பாடுகளை குழந்தைகளுக்கு, இன்றைய தாய்மார்கள் கொண்டு வர வேண்டும், அலைபேசியை தவிர்க்க வேண்டும், இதனால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
குழந்தைகளின் பார்வைகளை முழுக்க முழுக்க காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் பிபிஜி அப்டோமெட்ரி கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா, பிபிஜி மேலாண்மை கல்லூரியின் முதல்வர் டாக்டர் வித்யா, பிபிஜி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சத்யசீலன் மற்றும், டாக்டர் அக்ர்வால்ஸ் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணா பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் ஆதித்யா, சாந்தனு சக்ரவர்த்தி, இந்து மதி, கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பட்டுராஜ்

Comments
Post a Comment