திண்டுக்கல் மாவட்டம் பழனி வள்ளியப்பநகரை சேர்ந்தவர் ஜெயந்த் சமந்தா(34). வடமாநிலத்தை சேர்ந்த இவர், அப்பகுதியில் டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரிங் வேலைகள் பார்த்து வந்தார். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தொழில்போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பழனியை சேர்ந்த தர்மராஜ், ராமதுரை, ஈரோட்டை சேர்ந்த நவீன்குமார், தினேஷ்குமார், மணிகண்டன், சந்திரபிரகாஷ் ஆகிய 6 பேரும் சேர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ஜெயந்த் சமந்தாவை படுகொலை செய்தனர்.
இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றநடவடிக்கைகளை தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி பரிந்துரை செய்தார். கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் கொலையாளிகள் 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்: அரியநாயகம்
.jpg)
Comments
Post a Comment