கோவை அண்ணா சிலை பகுதியில், 2019 முதல் செயல்பட்டு வருகின்ற தனியார் இரு சக்கர வாகன ஷோருமில், புதிய ஜாவா 42 போபர் எனும் வாகனத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது இதனை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபீக் துவக்கி வைத்தார், இந்த வாகனத்தின் சிறப்பு குறித்து, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இப்ராகிம் ஷெரிப் கூறும் போது, தற்போது வந்துள்ள இந்த வாகனத்தில் காரை போன்று ஓட்டுநரின் இறுக்கைகளை தங்களது தேவைக்கு ஏற்ப மாற்றி வைத்து கொள்ளலாம்.
இந்த வாகனமானது மூன்று வண்ணங்களில் தற்போது வந்துள்ளது.வெள்ளை, ப்ரவ்ன், வெள்ளை சிகப்பு என இரு வண்ணம் என்று மூன்று வடிவங்களில் கிடைக்கின்றது. தற்போது ஒரு ஒட்டுநர் மட்டும் இயக்கும் வகையில் உள்ளது. இதில் கூடுதலாக இரண்டாவது இறுக்கை பொறுத்தும் வசதியும் உள்ளது என்றார், 334 சிசி குதிரை ஆற்றல் கொண்ட இந்த வாகனமானது, லிட்டருக்கு 25 முதல் 30 வரை பெறலாம் என்றும் அவர் கூறினார்.
இரண்டு ஏபிஎஸ் முறைகளை கொண்டது, யுஎஸ்பி பவர் பாயின்ட், ரேயின், ஆன்ரோடு, ஆகிய இரு செயல்திறன் கொண்டது, எல்சிடி டிஸ்பிளே 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த வாகனத்தின் டிஸ்பிளேவில், எரிபொருள் அளவை துள்ளியமாக கனக்கிட்டு காட்டும் வகையில் உள்ளது என்றும், லிக்விட் கூல் இஞ்சின் கொண்ட இந்த கியர்பாக்ஸில் 6 கியர்களை கொண்டது என்றும், இந்த வாகனத்தில் கூடுதல் சிறப்பாக, வாகன விபத்தை தவிர்க்கும் விதமாக வாகன இயக்கத்தின் பொழுது, வாகனம் தானாக ஒரு குறிப்பிட்ட டிகிரியில், வாகனம் சரியும் பொழுது வாகனத்தின் இஞ்சின் தானாக அணையும் திறன் கொண்டது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பட்டுராஜ்

Comments
Post a Comment