பெரியபாளையம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை பாம்பு கடித்ததில் அண்ணன் உயிரிழப்பு. தம்பி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு. இவருக்கு ரமேஷ் (13), தேவராஜ் (10) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.
சிறுவர்கள் இருவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் பாம்பை அடித்து விட்டு சிறுவர்களை மீட்டு வெங்கல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அண்ணன் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தம்பி தேவராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பாம்பு கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - சந்திரசேகர்

.jpeg)
Comments
Post a Comment