கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். கொரக்கவாடி ஏரிக்கரையில் உள்ள காட்டுக்கொட்டகையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் ராமநத்தம் போலீசார் அங்கு சென்ற பொழுது போலீசாரை கண்டதும் பரமசிவம் தப்பி ஓடியுள்ளார். போலீசார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: மருதுபாண்டியன்

Comments
Post a Comment