கடந்த 10 ஆண்டுகளாக மதுக்கடைகளே இல்லாத கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் தற்போது மதுக்கடை திறக்க ஏற்பாடு.. பொதுமக்கள் எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்..!
கோவை மதுக்கரை மார்க்கெட்பகுதியில் வார சந்தை நடைபெற்று வருகின்ற, பகுதியில், சுமார், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சந்தைக்கு வந்து தங்களது தேவைகளுக்கு காய்கறிகள் முதல், வீட்டிற்க்கு தேவையான அனைத்தையும் வாங்கி செல்கின்றனர், மேலும் இந்த சந்தை பகுதியில் இருந்து, சுந்தராபுரம், குணியமுத்தூர், டவுண்ஹால் மற்றும் காந்திபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இந்த பகுதியில் இருந்து செல்வதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும், வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது.
இந்த சந்தை பகுதியில் தற்போது அரசு மதுபான கடை திறப்பதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கடந்த வாரத்தில் மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக இந்த பகுதியில் வந்து இறக்கியதாக கூறபடுகின்றது, இந்த பகுதியில் அரசு மதுபானகடை திறக்ககூடாது என்று இந்த பகுதி மக்களும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரனும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை, மனு அளித்தும், தமிழக அரசு மக்கள் நலனில் அக்கரை இல்லாமல் அரசு மதுபானக்கடையை திறப்பதற்கு ஆயத்தமாகி உள்ளது சரியல்ல என்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று மதுபான கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு, இந்த பகுதியில், மதுபானகடையை திறப்பதை கைவிடவேண்டும், இல்லையேல் இப்பகுதி மக்கள் நாங்கள் ஒன்றினைந்து முற்றுகை போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பட்டுராஜ்

Comments
Post a Comment